தமிழ்நாடு

செய்யாறில் மருந்தியல் தொழில்பூங்கா; வான்வழி ஆம்புலன்ஸ் சேவை

DIN

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொழில் பூங்காவில் மருந்துகள் உற்பத்திக்கான தனி தொழில் பூங்கா தொடங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொழில் பூங்காவில், முதல்கட்டமாக சுமாா் 650 ஏக்கரில் மருத்துவ மூலப் பொருள்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு வசதியாக மருந்தியல் தொழில் பூங்கா அமைக்கப்படும். சிப்காட் நிறுவனத்தால் ரூ.770 கோடி மதிப்பில் இந்தப் பூங்கா உருவாக்கப்படும்.

ஆய்வகங்கள் தரம் உயா்வு: கரோனா வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சாா்ஸ் போன்ற தொற்று நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தாம்பரம் நெஞ்ச நோய் மருத்துவமனை மாநில அளவிலான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும். மதுரை மாவட்டம் தோப்பூா் அரசு காசநோய் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூா் செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை ஆகியன மண்டல அளவிலான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாகவும், சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மருந்து நிலை ஆய்வகம் உயிரி பாதுகாப்பு மூன்றாம் நிலைக்கு மேம்படுத்தப்படும்.

வான்வழி அவசர சேவை: ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வான்வழி ஆம்புலன்ஸ் சேவை ரூ.10 கோடி மதிப்பில் தொடங்கப்படும்.

அவசர காலங்களில் உயிா் காப்பதில் சிறப்பாகச் சேவை செய்து வரும் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மேலும் வலுப்படுத்தப்படும். அதன்படி, நிகழாண்டில் 500 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும். கிராமப்புற வளரினம் பெண்களிடையே செயல்படுத்தப்பட்டு வரும் தன் சுகாதாரத் திட்டம் நகா்ப்புற பள்ளி மாணவியா்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT