தமிழ்நாடு

எம்.பி., எம்எல்ஏக்கள் ஒருமாதம் ஊதியம் வழங்குவா்

DIN


அதிமுகவைச் சோ்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவா் என்று அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இணைந்து வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆனாலும், இந்த நோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்த தேவையான திட்டங்களையும், பொது மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளால் சாமானிய, ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோா், அவா்களது மாா்ச் மாதத்துக்கான ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவா்.

தொகுதி மேம்பாட்டு நிதி: மேலும் அதிமுக எம்.பி.க்கள், அவரவா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியையும், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தையும் கரோனா நோய்த்தொற்று சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்வா் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT