முகப்பு
தமிழ்நாடு

ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று

ஈரோட்டை சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று

ஈரோட்டை சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

ஈரோட்டை சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்லாந்து நாட்டை சார்ந்த நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்ததில் இரண்டு நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. 

நேற்று ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஈரோட்டை சேர்ந்த மேலும் 2 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போதுவரை 5 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. 

சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 நபர்களில் 5 நபர்களுக்கு கரோனா வைரஸ்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 23 நபர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது தற்காலிகமாக கரோனா சிகிச்சை மட்டுமே அளிக்கும் வகையில் 300 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 

மேலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் 8, பவானி அரசு மருத்துவமனையில் 10, அந்தியூர் அரசு மருத்துவமனையில் 6, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 4, கோபி அரசு மருத்துவமனையில் 4, ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் 5, லோட்டஸ் மருத்துவமனையில் 5, ஆஸ்ரம் பள்ளியில் 17 படுக்கைகள் என 363 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. கரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கைகளை நன்கு கழுவ வேண்டும், ஒருவருக்கு ஒருவர் 3 அடி சமூக இடைவெளியினை விட்டு செல்ல வேண்டும். தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. கரோனா வைரஸ் குறித்து சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →