தமிழ்நாடு

மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நடிகர் விமல்

மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நடிகர் விமல் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.

DIN

மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நடிகர் விமல் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தி கொண்டு இருந்து வரும் நடிகர் விமல், தனது சொந்த கிராமமான பன்னாங்கொம்பு பகுதியில் இன்று கிராமப்புற இளைஞர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து தூய்மைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 

அப்போது ஊராட்சி நிர்வாகம் மூலம் தெளிக்கப்பட்டு வரும் கிருமி நாசினி கருவியை நடிகர் விமல் வாங்கிகொண்டு பன்னாங்கொம்பு கிராம வீதிகளில் சென்று தானே கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்கொண்டார். திரை நட்சத்திரம் கிராமப்புறத்தில் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

SCROLL FOR NEXT