பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை: அமைச்சர் விஜயபாஸ்கர்
கரோனா சூழலை எதிர்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுபொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை: அமைச்சர் விஜயபாஸ்கர்
கரோனா சூழலை எதிர்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா சூழலை எதிர்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
"கரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவமனைகளைத் தயார்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 15,00 படுக்கைகள் அரசு தரப்பில் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கைகள் தயாராக உள்ளன. கரோனாவை எதிர்கொள்வதற்கான உச்சபட்ச தயார் நிலையை அரசு உறுதி செய்கிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்போடு மட்டுமே இந்த சூழலை எதிர்கொள்ள முடியும்.
பயணத் திட்டத்தை கண்டறிவதன்மூலமே சமூகப் பரவலைத் தடுக்க முடியும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மனநல மருத்துவர்கள் இருக்கின்றார்கள். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களிடம் ஆலோசனைகளைப் பெறலாம்" என்றார்.