தமிழ்நாடு

கரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும்: சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ

DIN

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக் கிழமை நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பு என்ற பெயரில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் இறந்துள்ளனர். அதேநேரம் அவர்கள் கரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்றும் பிற நோய்களால் இறந்திருக்கிறார்கள் என்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை அரசு பரப்புகிறது. இதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

வற்புறுத்தி கேட்டால் அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான ரத்தமாதிரி பெற்றிருப்பதாகவும் அது ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். 4 தினங்களில் பதில் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின்னர் ரிப்போர்ட் வந்து என்ன செய்வது இதற்கு ஏன் இவ்வளவு தாமதம் அதற்கான சிறப்பு வசதிகளை ஏன் தமிழக அரசு இன்னும் செய்யவில்லை நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாள் முதல் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்து விபரங்களை அரசு வெளியிட வேண்டும். 

இதைத் தான் சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் வைரஸ் பாதிப்பு தொடர்பான சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று குறிப்பிட்டார். கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் இறப்பின் சதவீதத்தை குறைப்பதற்காகவே தமிழக அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை மாற்றும் வகையில் குறைத்து உண்மைக்கு புறம்பாக பிரசாரம் செய்கிறது.  பிற நோயால்தான் இறந்துவிட்டார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஏற்கெனவே மத்திய அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது. 

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு இறந்த பிறகு வேறு நோயால்தான் இறந்தார்கள் என்று குறிப்பிடும் மருத்துவர்கள் அவர்களை ஏன் இந்த தனிப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தார்கள் என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. இதை மக்களுக்கு தெளிவுபடுத்த அரசு முன்வரவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT