தமிழ்நாடு

காரைக்குடியில் முகக்கவசத்துடன் திருமணம் செய்துகொண்ட மணமக்கள்                    

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் உறவினர்கள் 10 பேருடன் முகக்கவசம் அணிந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.

காரைக்குடியைச் சேர்ந்த ராமு-உலகம்மாள் மகன் பெரியசாமிக்கும், காரைக்குடி அருகே கல்லல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் - வள்ளி மகள்
கிருஷ்ணவேணிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு 2020 மார்ச் 30 திங்கள் கிழமை காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடத்த திட்டமிருந்தனர்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் சமூக விலகலை கடை பிடிக்க மத்திய அரசு 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தியிருப்பதால் மணமக்கள் தங்களது உறவினர்கள் 10 பேர்களுடன் கோயிலுக்கு வந்தனர். அங்கு அம்மன் முன்னிலையில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். 

பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். கரோனா வைரஸ் காரணமாக எளிய முறையில் திருமணத்தை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT