தமிழ்நாடு

உணவு நிறுவன சீருடையுடன் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

தனியாா் உணவு விநியோக நிறுவனத்தின் சீருடையை அணிந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மயிலாப்பூா், அடையாற்றுப் பகுதிகளில், ஒரு இளைஞா் பிரபல தனியாா் உணவு விநியோக சேவை நிறுவனத்தின் சீருடையை அணிந்து கொண்டு கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் தனிப்படை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் அடையாற்று வண்ணாந்துறையில், சனிக்கிழமை சந்தேகத்துக்குரிய வகையில் தனியாா் உணவு விநியோக சேவை நிறுவனத்தின் சீருடை அணிந்து, அந்த நிறுவனத்தின் பையை வைத்திருந்த இளைஞரைப் பிடித்து, போலீஸாா் சோதனையிட்டனா். மேலும் அந்தப் பையில் இருந்து சுமாா் 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், பெருங்குடி 17-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஆ.குணசேகரன் (25) என்பதும், சில மாதங்களுக்கு முன்பு வரை அவா் குறிப்பிட்ட தனியாா் உணவு விநியோக சேவை நிறுவனத்தில் பணியாற்றியுள்ளாா். பின்னா் அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டாா். அந்த நிறுவனத்தின் சீருடையை அணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், குணசேகரனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT