விழுப்புரத்தில் ரூ. 2000 உண்டியல் சேமிப்பு நிதியை கரோனா நிவாரணத்துக்கு வழங்கிய இரட்டையர் சிறுமிகள்
தற்போது கரோனா பாதிப்பு குறித்து தொலைக்காட்சிகளில் பார்வையிட்டதால், தங்களது சேமிப்பு நிதியை கரோனாவுக்கு செலவிட வழங்குவதாக தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எல்லை கிராமத்தை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் 40. இவரது மனைவி உஷா 37. இவர்களுக்கு பிரவீனா5, பிரித்தி 5 ஆகிய இரட்டை சிறுமியர் உள்ளனர். இவர்கள் விழுப்புரத்தில் உள்ள ஜான்டூயி பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகின்றனர்.
திங்கள் கிழமை பெற்றோர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சிறுமியர் இருவரும், தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 5 ரூபாய் 2 ரூபாய் நாணயங்கள், 10, 20 ரூபாய் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை கரோனா நிவாரண நிதியாக கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
இதுகுறித்து அனந்தகிருஷ்ணன் கூறியதாவது: எனது குழந்தைகள் இருவரும் உண்டியல் வைத்து சேமித்து வந்தனர். தற்போது கரோனா பாதிப்பு குறித்து தொலைக்காட்சிகளில் பார்வையிட்டதால், தங்களது சேமிப்பு நிதியை கரோனாவுக்கு செலவிட வழங்குவதாக தெரிவித்தனர்.
Advertisement
இதனால் அந்த தொகையை எடுத்து வந்து ஆட்சியரிடம் வழங்குவதாக தெரிவித்தார். நிதி அளித்த இரட்டையர் சிறுமிகளை அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் பாராட்டினர்.