கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடல்
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை (மே 5) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக சந்தையின் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை (மே 5) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக சந்தையின் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியுள்ளது. இதன் காரணமாக நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை (05.05.2020) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக சந்தையின் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் திருமழிசையில் வரும் (07.05.2020) வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.