முகப்பு
தமிழ்நாடு

தில்லி ராணுவ மருத்துவமனையில் 24 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவத்தில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவத்தில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் ரெஃபரல் மருத்துவமனையில் இன்று ராணுவத்தில் பணியாற்றி வரும் வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைவரும் தில்லியில் உள்ள ராணுவத்தின் முகாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த 24 பேரில், இந்திய ராணுவத்தில் பணியாற்றுவோர் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.