தமிழ்நாடு

குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதால்தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கத்திட்டம்: அமைச்சர் செல்லூர் ராஜூ 

DIN

குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதால்தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கத்திட்டமிடப்பட்டது என்றுத கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெவித்துள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், சென்னை பெருநகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மே 7-ம் தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் மதுபானக் கடைகள் மே 7-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் தலைவர் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. 

இதனிடையே குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதால்தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கத்திட்டமிடப்பட்டது என்றுத கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெவித்துள்ளார். மேலும் மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு மனமுவந்து எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT