முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

அறிகுறி இன்றி பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே சிகிச்சை: தமிழக அரசு

அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழ்நாடு

அறிகுறி இன்றி பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே சிகிச்சை: தமிழக அரசு

அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
கோப்புப்படம்
பகிர்:

அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு நேற்று மட்டும் 527 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில்  266 பேருக்கும், கடலூரில்122 பேருக்கும் நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த பாதிப்பு எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் பாதிக்கப்பட்ட 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இதன்படி எந்த அறிகுறியும் இல்லாதவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் 10 நாள்கள் ஜின்க்-20எம்ஜி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →