காரியாபட்டி அருகே மின்னல் தாக்கி 2 கூலித்தொழிலாளர்கள் சாவு
காரியாபட்டி அருகே விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
காரியாபட்டி அருகே விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அ. முக்குளம் அருகே தாமரைக் குளம் கிராமத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான வயல்காட்டில் விறகு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தாமரைக் குளத்தை சேர்ந்த கார்த்திகேயன், அம்பலத்தடி கிராமத்தைச் சேர்ந்த பாப்பா ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
இதுகுறித்து அ.முக்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.