தமிழ்நாடு

ஓமலூரில் மதுபானம் வாங்க அரசுப்பள்ளியில் டோக்கன் வழங்கியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

DIN

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் கிராமத்தில் அருகருகே மூன்று மதுக்கடைகள் அமைந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இந்தக் கடைகளுக்கு மது வாங்க வந்தவர்களுக்கு டோக்கன்கள் காமலாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதனால் அரசு பள்ளி அருகே 200க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் காமலாபுரம் கிராம மக்கள்  மது வாங்குவதற்கு அரசுப்பள்ளியில் டோக்கன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அரசுப் பள்ளியில் டோக்கன் வழங்கும் பணி நிறுத்தப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. 

புறவழிச் சாலையில் உள்ள மதுக்கடைக்கு அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள  கிராமத்தில் அரசுப்பணியில் டோக்கன் வழங்க முயன்ற சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT