தமிழ்நாடு

பரமக்குடியில் குடிபோதை தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

பரமக்குடியில் குடிபோதை தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

DIN

பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் சேக் (எ) ஜெயக்குமார்(25). அதே பகுதியைச் சேர்ந்த 6 நண்பர்கள் நேற்று பிற்பகல் பரமக்குடி பொன்னையாபுரம் அரசு கல்லூரி அருகேயுள்ள கண்மாய் கரையில் நின்று குடிபோதையில் பேசிக் கொண்டிருந்தனர்.

அதுசமயம் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆனந்த் ஆத்திரம் அடைந்த பொன்னையாபுரத்தைச் சேர்ந்த அழகர் மகன் ஆனந்த், ஜெயக்குமாரின் கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

தகவல் அறிந்து பரமக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் எமனேசுவரம் காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வாலிபர் ஆனந்த்(26 ) பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தொடர்ந்து எமனேசுவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரண் அடைந்த ஆனந்தை கைது செய்து, தலைமறைவான மேலும், தலைமறைவான 5 பேர்களை தீவிரமாக தேடி  வருகின்றனர். இறந்த ஜெயக்குமார் மற்றும் சரண் அடைந்த ஆனந்த் ஆகிய இருவர் மீதும் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT