தமிழ்நாடு

தமிழகத்தில் 447 பேருக்கு கரோனா; 10 நாள்களில் முதல் முறையாக 500க்குக் கீழ் குறைந்தது

DIN


சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் முதல் முறையாக இன்று கரோனா பாதிப்பு 500க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 363 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு 5,625 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 10 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு முதல் முறையாக 500க்கும் குறைவாக இன்று பதிவாகியுள்ளது.

அதே சமயம், தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் அதிகபட்சமாக இன்று 64 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று சென்னையில் புதிதாக கரோனா பாதிப்பு மூலம் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு 2,539 ஆக உயர்ந்துள்ளது. அதேபோலே தமிழகத்தில் கரோனா பாதிப்பு இன்று 9,674 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT