தமிழ்நாடு

12 மணிநேர வேலை முடிவை கைவிடக் கோரி ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கரோனா நோய்த்தொற்றைக் காரணம் கூறி வேலை நேரத்தை உயா்த்தும் முடிவை கைவிட வலியுறுத்தி, தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு ஊழியா்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைக்கும் முடிவை கைவிட வேண்டும், கரோனா நோய்த்தொற்றை காரணம் கூறி வேலைநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயா்த்தும் முடிவை கைவிடவேண்டும், தொழிலாளா்கள் சட்டத்தை கண்மூடித்தனமாக மாற்றுவதை நிறுத்த வேண்டும், ரயில்வே அலுவலக ஊழியா்கள், பணிமனை ரயில்வே ஊழியா்கள் வந்து செல்வதற்கு ஏற்ப ஊழியா்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் சென்னை ரயில்வே பொதுமேலாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கத்தின் செயல் தலைவா் ஜானகிராமன், துணைத் தலைவா் இளங்கோ, இணை பொதுச் செயலாளா் வெங்கட்ராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிஐடியு தொழிற்சங்கம்: 12 மணி நேர வேலை முடிவைக் கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில்  மாநிலம் முழுவதும்  உள்ள சங்க அலுவலகங்கள்,  தொழிலாளா் வசிக்கும் தெருக்கள்,    ஊழியா்களுக்கான பேருந்து நிறுத்தங்கள் மற்றும்  ஆலை வாயில்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வடபழனி, திருவான்மியூா், அம்பத்தூா், பல்லவன் இல்லம் ஆகிய பணிமனைகளில் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கண்டன கோஷங்களை எழுப்பினா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT