தமிழ்நாடு

ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் 100 மாணவர்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

மணப்பாறை கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஜே.ஆர்.சி மாணவ மாணவியர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை கல்வி மாவட்ட அளவில் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பாக தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தாய் அல்லது தந்தையை இழந்து வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் 100 ஜே.ஆர்.சி மாணவ மாணவியர்களுக்கு சுமார் ரூபாய் 750 மதிப்பிலான கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

ஜே.ஆர்.சி சப் கமிட்டி உறுப்பினர்கள் அருளரசன், சௌமா ராஜரெத்தினம், பக்கிரிசாமி, அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜே.ஆர்.சி மாணவ மாணவியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனர். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணப்பாறை கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் நிர்வாகிகள் லெட்சுமணன், விபின், செந்தில்குமார், லோகநாதன், கார்த்திகேயன், அழகர்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT