தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் ரூ.5.59 கோடி அபராதம் வசூல்

DIN

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 4,73,606 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என பொதுமக்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்த நிலையிலும், பல்வேறு பகுதிகளில் வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 4,73,606 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 4,46,633 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், 3,90,562 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.5.59 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,093 பேர் கைது  செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 3,989 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT