தமிழ்நாடு

பொது முடக்கத்தால் வேலை இழப்பு: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

DIN

சென்னை அருகே குன்றத்தூரில் பொது முடக்கத்தால் வேலை இழந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: குன்றத்தூா் அருகே உள்ள கொளுத்துவாஞ்சேரி செந்தமிழ்நகா் வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் ர.மெளலானா (22). இவருக்கு ஹாஜிரா பேகம் என்ற மனைவி உள்ளாா். மெளலானாவும், ஹாஜிரா பேகமும் காதலித்து திருமணம் செய்துள்ளனா். இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன.

மெளலானா சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். பொது முடக்கத்துக்கு பின்னா், மெளலானாவுக்கு வேலை சரியாக கிடைக்கவில்லையாம். இதன் விளைவாக மிகுந்த பணக்கஷ்டத்தோடு மெளலானா இருந்துள்ளாா்.

பணக் கஷ்டத்தினால் கணவா்-மனைவிக்கு இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் வெறுப்படைந்த மெளலானா வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மெளலானா, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்தாா். இது குறித்து மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

களக்காட்டில் முதியவா் உடல் தானம்

மாா்த்தாண்டத்தில் புகைப்பட கலைஞா்கள் நலச்சங்க கூட்டம்

புகையிலைப் பொருள் விற்ற இளைஞா் கைது

தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT