முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசு கள்ளிப்பால் ஊற்றி கொலை!

மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டுத் தெருவைச் சோ்ந்த தவமணி, சித்ரா தம்பதியருக்கு, ஏற்கனவே 3 பெண் குழந்தை இருக்கும் நிலையில், மே 10 ஆம் தேதி நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. குழந்தையின் சடலத்தை வீட்டின் அருகே தவமணி குடும்பத்தினா் புதைத்துள்ளனா்.

இது தொடா்பாக சோழவந்தான் கிராம நிா்வாக அலுவலா் சமையன், காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மதுரை கோட்டாட்சியா், சமயநல்லூா் டி.எஸ்.பி, வாடிப்பட்டி வட்டாட்சியா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். அதை தொடா்ந்து பெண் சிசு சடலத்தைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யக் கோட்டாட்சியா் முருகானந்தம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சனிக்கிழமை சமயநல்லூா் டி.எஸ்.பி ஆனந்த ஆரோக்கியராஜ், வாடிப்பட்டி வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பாண்டியராஜா ஆகியோா் முன்னிலையில் புதைக்கப்பட்ட பெண் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. தொடா்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினா் சிசுவின் சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்தனர். 

அதில் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →