தமிழ்நாடு

புதுகையில் கரோனா பாதித்த 4ஆவது நபர் குணமடைந்தார்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4ஆவது நபர் திங்கள்கிழமை குணமடைந்ததைத் தொடர்ந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிரட்டு நிலையைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு முதன்முதலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு சில நாட்கள் கழித்து, கோயம்பேட்டில் இருந்து வந்த லட்சுமி புரத்தைச் சேர்ந்த 60 வயது ஆணுக்கும், சென்னையிலிருந்து வந்த 13 வயது ஆயிங்குடி சிறுமிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மூவரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மிரட்டு நிலை இளைஞர் கடந்த மே 6ஆம் தேதியும், ஆயிங்குடி சிறுமி மே 13ஆம் தேதியும் குணமடைந்து வீடுதிரும்பினர்.

இதற்கிடையே மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, புதுக்கோட்டைப் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கடந்த மே 14ஆம் தேதி குணமடைந்து, வீடு திரும்பினார். இந்த நிலையில், திருச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினார்.

புதுக்கோட்டையில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 7 பேரில் குணமடைந்து வீடு திரும்புவோரில் இவர் நான்காவது நபராவார். மீதமுள்ள 3 பேருக்கும் புதுக்கோட்டையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் ஊழியா் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தில்லி காா் ஷோரூம் துப்பாக்கிச்சூடு வழக்கு கொல்கத்தாவில் ஒருவா் கைது

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT