தமிழ்நாடு

கிறிஸ்துவ சபையில் வெடிகுண்டு புரளி: காவல் துறையினர் சோதனை

DIN


கடலூர்: கடலூரிலுள்ள கிறிஸ்துவ சபைக்கு வெடிகுண்டு புரளி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.

கடலூர் முதுநகர் அருகிலுள்ள செல்லங்குப்பத்தில், பெந்தெகொஸ்தே கிறிஸ்துவ சபை உள்ளது. இங்கு கிறிஸ்துவத்தின் ஒரு பிரிவினர் பிரார்த்தனை நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த தபாலில், இந்த கிறிஸ்துவ சபைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடலூரிலிருந்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டினை கண்டறியும் கருவிகளுடன் சென்று சோதனை மேற்கொண்டனர்.

தற்போது அமலில் உள்ள பொது முடக்கத்தினால் இந்த சபையில் வழிபாடுகள் நடைபெறாத நிலையிலும் காவல் துறையினர் சபையை முழுவதுமாக சோதனை நடத்தினர். ஆனால், எந்தவிதமான சந்தேகப்படும்படியான பொருள்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனினும், கடந்த சில நாள்களில் இந்த சபைக்கு வந்துச் சென்றவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT