தமிழ்நாடு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மிக கடும் புயலான உம்பன் இன்று காலை 11 மணி நிலவரப்படி சற்று வலுவிழந்து கடும் புயலாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கொல்கத்தாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே சுமார் 690 கிலேமீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ளது. 

இது கடந்த 6 மணிநேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. உம்பன் புயலானது மேலும் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்க கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவிலோ தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 200-210 வரையிலும் இடையிடையே 230 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும். 

தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னர் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆனைமடுவு பகுதியில் 5 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT