தமிழ்நாடு

சாணாபுத்தூரில் 800 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் ஊராட்சியில் 800 குடும்பங்களுக்கு ஊராட்சி தலைவர் அம்பிகா பிர்லா சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

DIN

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் ஊராட்சியில் 800 குடும்பங்களுக்கு ஊராட்சி தலைவர் அம்பிகா பிர்லா சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் ஊராட்சியில் இரண்டாவது முறையாக ஊராட்சி சார்பில் ஊராட்சியைச் சேர்ந்த சாணாபுத்தூர், கொண்டமாநெல்லூர், அல்லிப்பூக்குளம் பகுதியை 800 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு ஊராட்சி தலைவர் அம்பிகா பிர்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பொன்னாம்மாள் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள் சுலோச்சனா சுப்பிரமணி, ஆனந்தகுமார், ஆனந்தன், மணி, மேத்தா ரவிச்சந்திரன், மேகலா தமிழரசன், கல்பனா சங்கர், கௌசல்யா சீனிவாசன், ஊராட்சி செயலாளர் பிர்லா முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமார், ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர்கள் இ.சீனிவாசன், ரோஜா ரமேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர், அதிமுக நிர்வாகிகள் எம்.எஸ்.எஸ்.சரவணன், தமிழ்வாணன், நிர்மல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT