திருவாடானை வேளாண் துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர் வழங்கல்
திருவாடானையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்குப் பண்ணை இயந்திரங்கள் வழங்கினார்கள்.
திருவாடானையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்குப் பண்ணை இயந்திரங்கள் வழங்கினார்கள்.
திருவாடானை ஒன்றியத்தில் 4 உழவர் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கமானது 100 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அதில் விவசாயிகள் அனைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விவசாயத்தை உரியக் காலத்திற்குள் செய்ய ஏதுவாக பன்ணை பொருட்கள் வாங்க ஏதுவாக ஒரு சங்கத்திற்கு அரசு சார்பில் ரூபாய் ஐந்து லட்சத்தை முதலீடாக வழங்குகிறது.
அதை வைத்து உழவர் உற்பத்தியாளர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் விவசாயத்திற்குத் தேவையான பண்ணை பொருட்களை வாங்கிக்கொண்டு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். அதன்படி செவ்வாய்க்கிழமை திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயத்திற்குத் தேவையான டிராக்டர் மூன்றினை விவசாயிகளுக்கு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் துணை இயக்குனர் கன்னையா தலைமை வகித்தார், விவசாய உதவி இயக்குநர் கருப்பையா முன்னிலை வகித்தார். இதில் டிநாகனி, தேளூர், கொடிப்பங்கு கிராமங்களின் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவிற்கு டிராக்டர் வாகனம் வழங்கப்பட்டது. உடன் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.