வடுகப்பட்டியில் உள்ள பொன்னி அம்மாள் ரங்கசாமி அரசு உயர்நிலை பள்ளி முன்பு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்புகளின் சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள். 
தமிழ்நாடு

கரோனா பொதுமுடக்கம் நினைவாக வடுகப்பட்டியில் 32 மரக்கன்றுகள் நட்டு வைப்பு 

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்புகள் இணைந்து கரோனா பொது முடக்கக்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்புகள் இணைந்து கரோனா பொது முடக்கக் காலத்தின் நினைவாக சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டியில் உள்ள பொன்னிஅம்மாள் ரங்கசாமி அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு 32 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன. 

கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் மே 31ம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு சுகாதாரத்துறையின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து கரோனா பொது முடக்கத்தின் நினைவாக வடுகப்பட்டியில் உள்ள பொன்னிஅம்மாள் ரங்கசாமி அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு 20 புங்கன்,10 வேம்பு, 2 கல்யாண முருங்கை மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

இந்நிகழ்ச்சிக்கு பசுமை சங்ககிரி அமைப்பின் மரம் பழனிசாமி தலைமை வகித்தார். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரகாஷ், ஆசிரியர்கள் ராமச்சந்திரன், செங்கோட்டுவேலு,வெங்கடாஜலம், பசுமை சங்ககிரி அமைப்பின் நிர்வாகிகள் பசுமை கனகராஜ், பசுமை சீனிவாசன், காந்தி, ராகுல், தினேஷ், மில்டர்ராஜ், இளங்கோ, சுந்தர், தேசிங்கு, சண்முகம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT