நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வியிடம் ரூ.50ஆயிரம் நிதி வழங்கிய எம்எல்ஏ பிவி.பாரதி 
தமிழ்நாடு

மூன்றாம் கட்டமாக அம்மா உணவகத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் சீர்காழி எம்எல்ஏ

சீர்காழி அம்மா உணவகத்திற்கு இலவசமாக உணவு வழங்கும் வகையில் 3-ம் கட்டமாக ரூ.50 ஆயிரத்தை எம்எல்ஏ பிவி.பாரதி புதன்கிழமை வழங்கினார்.

DIN

சீர்காழி அம்மா உணவகத்திற்கு இலவசமாக உணவு வழங்கும் வகையில் 3-ம் கட்டமாக ரூ.50 ஆயிரத்தை எம்எல்ஏ பிவி.பாரதி புதன்கிழமை வழங்கினார்.

கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்கும் வகையில் சீர்காழி எம்எல்ஏ பிவி.பாரதி இரண்டு கட்டமாக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மே 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இலவசமாக அம்மா உணவகத்தில் உணவு வழங்கிடும் வகையில் மூன்றாம் கட்டமாக ரூ.50 ஆயிரம் பணத்தை நகராட்சி ஆணையர் பெ.தமிழ் செல்வியிடம் எம்எல்ஏ வழங்கினார்.

தொடர்ந்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் 15 பேருக்கு சேலைகள் வழங்கினார். அப்போது பொறியாளர் வசந்தன், வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், அதிமுக ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, வழக்குரைஞர் நெடுஞ்செழியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பரணிதரன், ஒப்பந்ததாரர்கள் மருது பாண்டியன், அலெக்ஸ் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT