முகப்பு
தமிழ்நாடு

அம்மாபேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு திமுகவினர் நிவாரணம்

அம்மாபேட்டையில் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார் திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்.பி.சேகர்.
பகிர்:

அம்மாபேட்டையில் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம் பேரூராட்சி மற்றும் அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் 450 பேர், மாற்றுத் திறனாளிகள் 50 பேர் மற்றும் நரிக்குறவர் சமூதாயத்தைச் சேர்ந்த 13 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருள்கள், முட்டை மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்.பி.சேகர் தலைமை வகித்தார். ஊராட்சிச் செயலாளர்கள் இரா.கந்தசாமி, எஸ்.பாலுச்சாமி, தொமுச தலைவர் ஏ.எஸ்.தங்கராஜு, நெரி்ஞ்சிப்பேட்டை பேரூர் செயலாளர் என்.பி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →