தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் மட்டும் 718 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறமாநிலங்கள் மற்றும் பிறநாடுகளிலிருந்து வந்த 47 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 8 பேர் பலியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 833 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,324 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் மொத்தம் 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 11,441 பேருக்கு பரிசோதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மொத்தம் 3,91,252 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மொத்தம் பாதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 587 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT