பேளூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி வழங்கல்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேளூர் ஜெயமுருகன் குழுமம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேளூர் ஜெயமுருகன் குழுமம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.
பேளூர் ஜெயமுருகன் திருமண மண்டபம் மற்றும் பெட்ரோல் பங்க் குழுமத்தின் தலைவரும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலர் குறிச்சி கே. பி. சண்முகம், ச. துரைமுருகன் ஆகியோர் பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும், திங்கள்கிழமை அரிசி வழங்கினார். ஜெயமுருகன் குழுமத்தினருக்கு, பேரூராட்சி பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.