பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணித் தோ்வு முறைகேடு 
தமிழ்நாடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: 199 பேருக்கு வாழ்நாள் தடை

2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையார் தேர்வில் பங்கேற்ற 199 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அனைவருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு  அறிவிப்பு வெளியிட்டது. 

இதன்படி மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகளை அடுத்து ஆசிரியர் தேர்வு  வாரியம் போட்டித் தேர்வு நடத்த அறிவித்தது. இதன்படி, 2017 செப்டம்பர் 16-ஆம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில்  2 ஆயிரம் பேருக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.  அதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 199 பேர் போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டித் தேர்வின் விடைத்தாள்களை திருத்திய தனியார் நிறுவனத்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, இந்த போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

ரூ.3 கோடி மதிப்பில் ஆன்லைன் வா்த்தக மோசடி: 3 போ் கைது

மோசமான வானிலை: தில்லியில் திருப்பிவிடப்பட்ட 5 விமானங்கள்

டிடிஏ அதிகாரியை பதவியில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் 3 போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பு- அக்.17 இல் தண்டனை அறிவிப்பு

SCROLL FOR NEXT