தமிழ்நாடு

கோவையில் இரு ஆலயங்களில் பன்றி இறைச்சியை வீசிச் சென்ற மர்ம நபர்கள்

DIN

கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோயில்களில் பன்றி இறைச்சியை மர்ம நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரம் சலீவன் வீதியில் வேணுகோபால கிருஷ்ண சுவாமி ஆலயம், ராகவேந்திரர் ஆலயங்கள் உள்ளன. கரோனா அச்சம் காரணமாக இந்த ஆலயங்கள் பூட்டிக் கிடக்கின்றன. 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தில் பன்றி இறைச்சியை வாங்கி வந்து அதைக் கோயில் வாசலில் வீசிச் சென்றனர்.

இதை அறிந்த இந்து அமைப்பினர் அப்பகுதியில் திரண்டு பன்றி இறைச்சியை ஆலய வாசலில் வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT