முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு குறித்து சீமான் கேள்வி

ஆன்லைன் மூலமாக நீதிபதிகள் வழக்குகளை விசாரித்துவரும் நிலையில், மாணவர்களால் மட்டும் எப்படி பள்ளிக்குச் செல்ல முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
சீமான்
பகிர்:

ஆன்லைன் மூலமாக நீதிபதிகள் வழக்குகளை விசாரித்துவரும் நிலையில், மாணவர்களால் மட்டும் எப்படி பள்ளிக்குச் செல்ல முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாடு நாளையொட்டி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணா 'தமிழ்நாடு'  என பெயரிட்ட நாளைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடுகிறார்கள். பிள்ளை பிறந்தநாளைத் தான் கொண்டாடுவார்களே தவிர பிள்ளைக்கு பெயர் வைத்த நாளை கொண்டாட மாட்டார்கள் என்றார். 

நாடு முழுவதும் மதம் பிடித்து அலைகிறது. அவ்வாறு மதம் பிடித்து அலைந்தால் நாடு நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது. மக்களின் பிரச்சனையே பாஜக தான்.

நான் வேல் தூக்கும்போது அனைவரும் இழிவாகப் பேசினார்கள். அப்போது சீமானுக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. அப்போதும் பாஜக இருந்தது. இப்போது தமிழகத்தில் வேல் யாத்திரை மூலமாக இடம்பிடிக்க பாஜக நினைக்கிறது. ஆனால் அந்த வேல்-ஐ வைத்தே அரசியல் களத்தில் பாஜகவை வீழ்த்துவோம் என்று பேசினார். 

பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீதி அரசர்கள் நீதிமன்றங்களுக்கு வராமலேயே ஆன்லைன் மூலம் தீர்ப்பளிக்கின்றனர். ஆனால், பள்ளி மாணவர்கள் மட்டும் எப்படி ஒரே அறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். 

முழு கட்டுரையைப் படிக்க →