தமிழ்நாடு

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணை: ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜர்

DIN

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மே மாதம் ஆர்எஸ் பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜரானார். அவருக்கு வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கிய நீதிபதி ரவி, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT