முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் தர்ணா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
தியாகராஜ நகரில் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.
பகிர்:


திருநெல்வேலி: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் தர்ணா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மின்வாரியத்தை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற செயலை நிறுத்த வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் ஆகியோரின் பதவி உயர்வுகளை கானல் நீராக மாற்றும் உத்தரவுகளை நீக்க வேண்டும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தாமல் தொழிலாளர் விரோத போக்கினைக் கடைப்பிடிக்கும் மின்வாரிய தலைவரின் செயலைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்திற்கு கே.கே.பெருமாள்சாமி தலைமை வகித்தார். எம்.பீர்முகம்மதுஷா வரவேற்றார். ஏஐடியுசி மாநில செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன், சிஐடியு மாவட்டச் செயலர் ஆர்.மோகன், தொமுச அமைப்புச் செயலர் ஆர்.தர்மன், எஸ்.வண்ணமுத்து, கே.இசக்கிப்பாண்டி, எஸ்.மணிவாசகம், ஏ.முருகன், டி.நல்லதுரை உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சு.நச்சினார்கினியன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →