முகப்பு
தமிழ்நாடு

தம்மம்பட்டியில் மழையின்றி காய்ந்த மக்காச்சோளப் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

சேலம் தம்மம்பட்டி பகுதியில் மழையில்லாததால் மக்காச்சோளப் பயிர்கள் காய்ந்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
தம்மம்பட்டியில் மழையின்றி காய்ந்த மக்காச்சோளப் பயிர்கள்
பகிர்:

சேலம் தம்மம்பட்டி பகுதியில் மழையில்லாததால் மக்காச்சோளப் பயிர்கள் காய்ந்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களான நாகியம்பட்டி, உலிபுரம், கொண்டயம்பள்ளி, தெடாவூர், வீரகனூர் மெட்டாலா, நாரைக் கிணறு, கொப்பம்பட்டி, மங்கப்பட்டி மற்றும் கொல்லிமலையிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளிட்ட பகுதியில், போதிய மழை இல்லை. அதனால், மானாவாரியாகப் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்கள் காய்ந்து வீணாகி வருகிறது. இதனால்  விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கரோனா காலத்தில் வருமானமின்றி  விவசாயிகள் இருந்து வருகின்றனர். 

தமிழகத்தில், ஆண்டுதோறும், பருவமழை காலத்தின் துவக்கமான செப்டம்பர் மாதத்தில், பருவமழையை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் அதிக பரப்பளவில் மக்காச்சோளத்தை மானாவாரிப் பயிராக நடவு செய்வது வழக்கம். செப்டம்பர் மாதத்தில் நடவு செய்யப்படும் மக்காச்சோளம் 120 நாள்கள் சென்று, டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது, ஜனவரி மாதம் துவக்கத்தில், அறுவடை செய்வார்கள்.

அதன்படி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள், பருவமழையை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், இந்த ஆண்டும், விவசாயிகள் மக்காச்சோளத்தை நடவு செய்துள்ளனர். முன் பருவத்தில் நடவு செய்த மக்காச்சோளப் பயிர்கள், தற்போது, கதிர்கள் பால் பிடித்து மணிகள்  பெருக்கும் காலமாக உள்ளது. இந்த தருணத்தில், தம்மம்பட்டி பகுதியில் போதிய மழை பெய்யாததால், ஈரப்பதம் இன்றி மக்காச்சோளப் பயிர்கள் காய்ந்து, மக்காச்சோள மணிகள் மிகவும் சிறுத்து, கருத்து போய்விட்டது.

இனி மழை பெய்தாலும், கதிர் மணிகள் பெருக்காது. இது குறித்து மக்காச்சோள விவசாயிகள் கூறியதாவது,   இந்த ஆண்டு, மானாவாரியாக நடவு செய்துள்ள மக்காச்சோளத்தால் பெரும் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.