பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் மதுரை கொண்டு செல்லப்பட்டது
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு வங்கியில் இருந்து கொண்டு வரப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரையில் உள்ள வங்கிக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.
கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் கடந்த 2014ம் ஆண்டு 13.5 கிலோ எடை அளவில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து தேவர் சிலை தங்கக் கவசத்தை வழங்கினார்.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு மதுரை வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட இந்த தங்கக் கவசம் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு குருபூஜை விழாவிற்கு முன்பாக காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பின்னர் மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்படும்.
இந்த ஆண்டு கடந்த மாதம் அக். 28,29,30 ஆகிய நாள்களில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் 58வது குருபூஜை விழா, 113வது ஜெயந்தி விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக மதுரை வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த தங்கக் கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த அக்.23 ம் தேதி தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து ஒப்படைத்தார்.
குருபூஜை விழா நிறைவு பெற்றதையடுத்து இன்று துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இருந்து தங்கக் கவசம் மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்க நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் அம்மாள், தங்கவேலு ஆகியோர் தலைமையில் கொண்டு செல்லப்பட்டது.