முகப்பு
தமிழ்நாடு

கொடுமணல் அகழாய்வுப் பணியில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பது ஏன்?: நீதிமன்றம்

கொடுமணல் அகழாய்வுப் பணியில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பது ஏன் என்று தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
கொடுமணல் அகழாய்வுப் பணியில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பது ஏன்? (கோப்புப்படம்)
பகிர்:

கொடுமணல் அகழாய்வுப் பணியில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பது ஏன் என்று தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கொடுமணல் அகழாய்வுப் பொருள்களை கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்த அடுத்த 10 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை காமராஜ், புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் தொல்லியல்துறை அகழாய்வுப் பணிகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொடுமணல் அகழாய்வில் 
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ் சார்ந்தவையாக உள்ள நிலையில் சமஸ்கிருதம் அறிந்தவர்கள் ஏன் பணியில் உள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்
 
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை புளோரிடாவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். அகழாய்வுப் பொருள்களை அனுப்பவும், சோதனை செய்யவும் தமிழக அரசு உடனடியாக தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

இதுவரையிலான அகழாய்வில் நெடில் எழுத்துகள் கிடைக்காத நிலையில் தற்போது கொடுமணல் அகழாய்வில் அ, ஆ, இ, ஈ போன்ற எழுத்துகள் கிடத்துள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.