39 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம் விலை
சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து, ரூ.39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து, ரூ.39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.456 உயா்ந்து, ரூ.38,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.57 உயா்ந்து, ரூ.4,867 ஆக விற்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயா்ந்து, ரூ.69.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயா்ந்து, ரூ.69,500 ஆகவும் உள்ளது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,867
1 சவரன் தங்கம்............................... 38,936
1 கிராம் வெள்ளி............................. 69.50
1 கிலோ வெள்ளி............................. 69,500
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,810
1 சவரன் தங்கம்...............................38,480
1 கிராம் வெள்ளி.............................67.50
1 கிலோ வெள்ளி.............................67,500