தமிழ்நாடு

மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN

மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், முதல் கட்ட  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 205 க.அடி நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது.  

இதனையடுத்து கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இன்று பிற்பகலில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணை 53 அடியாக உயரத்தை எட்டிய பிறகு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.  55 அடியாக உயரத்தை அடைந்த பின் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு முழு தண்ணீரும் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT