மேட்டூா் அணை நீா்மட்டம்: 95.25 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 95.25 அடியாக இருந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 95.25 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,881 கன அடியில் இருந்து 7,924 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 58.85 டி.எம்.சி.யாக உள்ளது.
கல்லணையிலிருந்து வினாடிக்கு காவிரியில் 6,001 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 7,000 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,709 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.