முகப்பு
தமிழ்நாடு

வாராணசியைப் போல மதுரை விமான நிலையத்தில் பாலம் அமைக்கப்படும்: அமைச்சர்

வாராணசியைப் போல மதுரை விமான நிலையத்தில் பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு.
பகிர்:

வாராணசியைப் போல மதுரை விமான நிலையத்தில் பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டம் குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளரிடம் கூறியது:

நீர் மேலாண்மையில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது என மத்திய ஜலசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், குடிமராமத்துத் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக முதல்வர் செய்து வருகிறார்.

ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் அமைக்கும் பணியானது தமிழகத்தில் நடைபெற உள்ளது.

நீர் மேலாண்மையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக மழைநீர் சேகரிப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது உள்ள குடிமராமத்துப் பணியால் வடகிழக்கு, தென் கிழக்கு பருவமழையின் நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும்.

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிக்காக 90 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

1.5 கிலோ மீட்டர் முதல் 2 கி.மீ ஓடுதள விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது, ஓடுதள விரிவாக்கப் பணிகளில் இடையே திருமங்கலம் சுற்றுச்சாலை அமைந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பகுதியில் வாராணசி விமான நிலையம் போல் பாலம் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். 

கூடிய விரைவில் மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணியானது தொடங்க உள்ளது. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →