மானாமதுரை கால் பிரவில் தலித் ஊராட்சித் தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி; ராஜிநாமா செய்யப் போவதாக அற 
தமிழ்நாடு

மானாமதுரை கால்பிரவில் தலித் ஊராட்சித் தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி; ராஜிநாமா செய்யப் போவதாக அறிவிப்பு

மானாமதுரை ஒன்றியத்தில் தலித் ஊராட்சி மன்றத் தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி தரப்படுவதால்,  ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

DIN

மானாமதுரை: மானாமதுரை ஒன்றியத்தில் தலித் ஊராட்சி மன்றத் தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி தரப்படுவதால்,  ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி பாண்டி (44). போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர். துணை தலைவராக அதிமுக வைச் சேர்ந்த நாகராஜன் உள்ளார். 6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் தலைவர் ராஜேஸ்வரிக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

தலித் என்பதால் கடந்த 11 மாத காலமாக ஊராட்சி மன்ற தலைவரை புறக்கணித்தே வருகின்றனர். கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. தலைவர் ராஜேஸ்வரி வந்தால் மற்றவர்கள் வெளியேறி விடுவார்கள். கால்பிரவில்  நடைபெறும் எந்த  திட்டங்களுக்கும் அழைப்பதில்லை. காசோலை புத்தகம் துணை தலைவர் வசமே உள்ளது. புறக்கணிப்பு குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும் மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை எனக் கூறி இன்று பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார்.
அதிமுக வைச் சேர்ந்த துணைத் தலைவரான நாகராஜ், தரும் நெருக்கடிகள், தொடர்ந்து சாதி ரீதியாக அவமானப்படுத்தப் படுவதால் வேறு வழியின்றி பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் அதிகாரிகள் கால்பிரவு வர உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

SCROLL FOR NEXT