தமிழ்நாடு

நடுவலூர்: விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறிய பெண் மகாராஷ்டிரத்தில் மீட்பு

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே  நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மணி என்பவரது மகள் நிஷா என்கிற  அருள்மொழி (25). 

இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேரில், சீனிவாசன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வசித்து வருகிறார். ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.  மன விரக்தியில் அண்மையில் தாய் வீடான நடுவலூர் வந்து தங்கியிருந்தார்.  கடந்த 4-ந் தேதி  இரவு விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறினார். மகளை காணாத பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்ய தாமதப்படுத்துவதாக  காவல் ஆய்வாளரிடம் புகார் தெரிவித்ததையடுத்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளருக்கு, காவல் ஆய்வாளர் முருகன் உத்தரவிட்டார். 

இதையடுத்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்து கெங்கவல்லி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். நவ.7-ந் தேதி காலை 7.00 மணி அளவில் வேற்று மாநில எண்ணிலிருந்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உஷார் அடைந்த காவல்துறையினர், அந்த எண்ணின் சிக்னலை ஆராய்ந்த பொழுது அது மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பகுதியை காட்டியது. உடனடியாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்து சோலாப்பூர் ரயில் நிலையத்திலேயே அந்த பெண்ணை ரயில்வே காவலர்கள் மீட்டனர். உடனடியாக நடைமுறைகளைப் பின்பற்றி கெங்கவல்லி காவலர்களும் வாடகை வாகனத்தில் அந்த பெண்ணை மீட்க  மகராஷ்டிரம் புறப்பட்டனர். 

ஞாயிறு காலை 11 மணியளவில் சோலாப்பூர் சென்ற கெங்கவல்லி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணை மீட்டனர்.  எதற்காக அந்த பெண் வீட்டை விட்டு சென்றார்? அல்லது யாரேனும் மிரட்டி அழைத்துச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது விசாரணைக்குப் பின்னர் தெரிய வரும் என்று  காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT