முகப்பு
தமிழ்நாடு

அருங்காட்சியகங்கள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
சென்னை எழும்பூர் அருங்காட்சியகம்
பகிர்:

தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

► சென்னை அரசு அருங்காட்சியகத்தைப் பார்வையிட கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.  

► நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

► பார்வையாளர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்த பிறகே அருங்காட்சியகத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

► அருங்காட்சியக நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

► அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் எந்த பொருளையும் தொடாமல் பார்க்க வேண்டும்.

► பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

► 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் வருவதைத் தவிர்க்க வேண்டும். 

► கரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அருங்காட்சியகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். 

► மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. 

► அருங்காட்சியகத்தில் கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என குழு கண்காணிக்க வேண்டும்.

► அருங்காட்சியகம் திறப்பு நேரத்தை 30 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →