அம்பாசமுத்திரம்: ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்விக் குழும நிறுவனர் அண்ணல் அனந்தராமகிருஷ்ணன் பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.
பிறந்த நாளை முன்னிட்டு ஆழ்வார்குறிச்சியில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் தேவராஜன், மேல்நிலைப் பள்ளி செயலர் சுந்தரம், முதல்வர் வெங்கட்ராமன், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன், மழலையர் பள்ளி தலைமை ஆசிரியை ரோகினி, பரமகல்யாணி மருத்துவமனை மருத்துவர் பிரேமா ராணி, முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொறியாளர் நாடாக்கண்ணு, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், திருவள்ளுவர் கழக நிர்வாகிகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.