முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் நெருங்குவதால்தான் வேல் யாத்திரை: அமைச்சர் செல்லூர் ராஜு

தேர்தல் நெருங்குவதால்தான் பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்துகின்றனர் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசுக் குழந்தைகள் காப்பக பயன்பாட்டை துவக்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு
பகிர்:

மதுரை: தேர்தல் நெருங்குவதால்தான் பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்துகின்றனர் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.

சமூக நலத்துறையின்கீழ் மதுரை தங்கராஜ் சாலையில் செயல்படும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசுக் குழந்தைகள் காப்பகத்துக்கு ரூ. 5 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் காணொலியில் திறந்து வைத்தார். இக்கட்டடத்தை 
பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு குத்துவிளக்கேற்றி புதன்கிழமை திறந்து வைத்தார்.

இதில், மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியது:

திமுக ஆட்சியின்போது மதுரை மாவட்டத்தில் ரவுடி கலாசாரம் தலைதூக்கியிருந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருவதற்கே அஞ்சினார். ஆனால், தற்போது நிலைமை அப்படியல்ல.

அதிமுக அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் மதுரை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதிமுக அரசின் வளர்ச்சித் திட்டங்களை நேரில் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும்.

பிகார் தேர்தல், மழை காரணமாக வெங்காயம் கொண்டு வர முடியாததால் தமிழகத்தில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.  வரும் நாள்களில் விலை குறைந்துவிடும்.

கரோனா தொற்று காலத்தில் பாஜக வேல் யாத்திரையை தவிர்த்து இருக்கலாம் அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் நெருங்குவதாலும் வேல் யாத்திரையை நடத்துகின்றனர் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →