தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு: தமிழக அரசு தகவல்

DIN


மதுரை: கரோனா அச்சம் காரணமாக, டிசம்பர் மாதத்துக்குப் பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கும் போது, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட நிகழ்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்புகளை தமிழக அரசு நடத்தி வரும் நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தங்களது இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். 


இது நீதிமன்றத்தின் கருத்துதான் என்றும், தமிழக அரசு சிறப்பான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேவேளையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லுரிகளைத் திறப்பதற்கு எதிரான வழக்கை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT